» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 238 அரசுப் பள்ளிகள் மட்டும் 100% தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை மீது அன்புமணி விமர்சனம்
புதன் 16, மே 2018 4:13:37 PM (IST)
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் 100% தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெட்கப்பட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. உதாரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6,754 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது 28.23 விழுக்காடு ஆகும். இது மிகவும் கவுரவமான ஒன்றாகும். ஆனால், தமிழகத்திலுள்ள 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் தான் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது வெறும் 9.24% மட்டுமே. 25% அரசுப் பள்ளிகளால் கூட முழுத் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது பள்ளிக்கல்வித் துறை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதேபோல், தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கடைசி இடம் வழக்கம் போல வட மாவட்டங்களுக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் 83.35% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அளவைவிட 03.01% குறைந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி மாநில அளவில் கடைசி 10 இடங்களை, அதாவது முறையே 23 முதல் 32 ஆவது இடம் வரை பிடித்துள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், விழுப்புரம் ஆகியவை வட தமிழகத்தையும், காவிரி பாசனப் பகுதியையும் சேர்ந்தவை ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது. வட தமிழக மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை.
இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ராமதாஸ் : கே.எஸ்.அழகிரி
சனி 23, பிப்ரவரி 2019 6:23:33 PM (IST)

திமுக சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: அன்பழகன் அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 5:30:08 PM (IST)

அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவு : முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி
சனி 23, பிப்ரவரி 2019 3:37:02 PM (IST)

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!!
சனி 23, பிப்ரவரி 2019 3:35:07 PM (IST)

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)
