» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் விண்ணப்பம்? ப.சிதம்பரம் கேள்வி

புதன் 16, மே 2018 5:36:48 PM (IST)

இபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம்  விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதி இருந்தார். அதில் கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் வெற்றியை, "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என வர்ணித்திருந்தார்.

இந்நிலையில் இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம்  விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்?  இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

Indianமே 17, 2018 - 12:58:56 PM | Posted IP 162.1*****

Former FM did not read the news. Kaveri Management Board has been accepted at the Supreme Court as per TN Govt. requests.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory