» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசன் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்காது : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

வியாழன் 17, மே 2018 1:26:11 PM (IST)

காவிரி தொடர்பான கமல்ஹாசன் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார்.இதற்காக அவர் அனைத்து கட்சி தலைவ ர்களையும் சந்தித்து அழைப்பு விடு த்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவிரி தொடர்பான கமல்ஹாசன் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்காது என்றார்.

மேலும்  தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.அவர்கள் மாநிலங்களின் நிலையை கருத்தில் கொள்வதில்லை.கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது என்றும் ஸ்டாலின் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory