» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டாரா குஷ்பு? திருநாவுக்கரசர் கருத்துக்கு திமுக மறுப்பு

வியாழன் 17, மே 2018 3:31:41 PM (IST)

திமுகவில் இருந்து நடிகை குஷ்பு செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டதாக திருநாவுக்கரசர் கூறிய கருத்துக்கு திமுக மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதியவர் நியமனம் செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திமுகவில் இருந்து முட்டை, செருப்பால் அடித்து குஷ்பு வெளியேற்றப்பட்டார் என்றும், காங்கிரஸ் கட்சியில் அவரது நடிப்பு எடுபடாது என்றும் தெரிவித்தார். 

ஆனால் திருநாவுக்கரசரின் இந்த கருத்தை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.விலிருந்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அண்ணன் க.திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார். திமுகவினர் யாருமே குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை - தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 17, 2018 - 04:16:38 PM | Posted IP 162.1*****

ஜெயலலிதா மறைந்ததில் இருந்து திருநாவுக்கரசருக்கு அதிமுக மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கிறது. அங்கே இருந்திருந்தால் இந்நேரம் முதல்வராகி இருக்கலாமோ என்று கனவு தான் காரணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory