» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முயற்சிக்கிறேன் , பலனை அனுபவிப்பேனா தெரியாது :கமல்ஹாசன்

வியாழன் 17, மே 2018 7:27:01 PM (IST)
தமிழகத்தில் தற்போதைய நிலைமையை மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் பலனை அனுபவிக்க நான் இருப்பேனா என்பதை தெரியாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார். 

மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இரண்டாவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்போது நேற்றுகாலை நெல்லை மாவட்டம் காவல்கிணறு, திசையன்விளை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு வழியாக திருச்செந்தூர் வந்தார். அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமை வகித்தார். மகளிரணி பேச்சாளர் திவ்ய பாரதி வரவேற்றார். கூட்டத்தில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

இங்கே மேடையில் இருக்கும் சகோதரர்கள் இன்று, நேற்றாக என்னுடன் இருப்பவர்கள் அல்ல. எப்போதும் என்னுடன் இருப்பவர்கள். என்னுடன் போட்டோ எடுத்துகொள்வதை முக்கிய வேலையாக செய்யும் கூட்டம் அல்ல. அப்படி ஒரு ஒப்பந்தத்துடன் நற்பணி இயக்கமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. நற்பணி இயக்கமாக தொடங்கி இன்று அது மக்களின் நீதி மய்யமாக மாறியிருக்கிறது. சென்னையில் வரும் 25ம் தேதி முதல் சென்னையில் நேர்காணல் நடக்க இருக்கிறது. அதில் அனைவரும் வரவேண்டும். இயக்கத்தை சேர்ந்தவர்களும், மய்யத்தை சேர்ந்தவர்கள் வரவேண்டும். அன்று நம்முடைய பாதை என்ன என்பது முடிவாகிவிட்டது. 

நம்முடைய கட்டமைப்பு என்ன என்பதை மக்கள் நீதி மய்யம் சொல்ல கடமைபட்டிருக்கிறது. சாதி மதத்திற்கு எதிராக எதிர்த்து நிற்கிறேன். நான் மக்களுக்கு இடையூறாக இருக்கும் எல்லா விஷயங்களுக்கு எதிராக நிற்கிறேன். நான் வணங்குவதும நேசிப்பதும் மனிதர்களை தான். அதையும் ஒரு படி மேலாக மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். அதற்கு நாம் என்றென்றும் தலைவணங்குகிறேன். அதற்காக தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனக்கு கொடுக்கபட்டிருக்கும் வேலை என் வாழ்நாள் மக்களுக்கு பணி செய்ய பயன்படும். ஏற்கனவே தொலைகாட்சியில் சொல்லியிருக்கிறேன். இப்போது நேரடியாக சொல்ல விரும்புகிறேன். வழக்கமாக தேர்தல் சமயத்தில் தான் அரசியல்வாதிகள் சுற்றுப்பயணம் செய்வார்கள். நாம் சுற்றுபயணம் மேற்கொண்டிருப்பது என்னை தேற்றிக்கொள்ளவும், மக்களை பற்றிய என்னுடைய கல்வியை இன்னும் அதிகபடித்து கொள்ளவும் தான். காந்தியார் பாரத் தர்ஷன் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்வது போன்று தான். காந்தியை தான் நான் பின்பற்றுகிறேன். நான் அவரை பார்த்து கூட கிடையாது. அவர் இறந்த பிறகு பிறந்த பிள்ளை நான்.  

இன்றும் அவரது ரசிகர் மன்றம் போல் இயங்கி கொண்டு இருக்கிறேன். மாறுப்பட்ட நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் அவரை பின்பற்று கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்தஅளவிற்கு தேசபக்தி யும் சிரமேற்கொண்டு செய்தார்கள்.அதே போல் நம்முடைய பாரம்ப ரியத்தையும், கலாச்சாரத்தையும், முன்னோடிகளையும், முன்னோர்களை வணங்குவதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. 

அதற்கு என்னுடைய கொள்கைகள் இடைஞ்சலாக இருக்காது. உங்களுடைய மதங்கள், தெய்வங்கள் எதுவுமே எனக்கு இடைஞ்சலாக இருக்காது. நானும் இடைஞ்சலாக இருக்கமாட்டேன். மக்கள் முன்னேற்றத்திற்கு எது பிரயோஜனப்பட்டாலும் அதை சிரமேற்கொண்டு செய்வதற்கும், மக்களை எது பிளவுப்படுத்துவதற்கு குறுக்கே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு என்னுள் தன்மை விதைக்கப்பட்டிருக்கிறது.  

இந்தியா அற்புதமான நாடு. தமிழகம் பெரிய பண்பாடு கொண்டது. ஆனால் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியும். அந்த நிலையிலிருந்து மாறுப்பட வேண்டும். இந்த நிலைமைக்கு ஆளானதற்கு நாம் தானே காரணம். குரல் கொடுத்திருந்தாலும் இந்த நிலை வந்திருக்காது. இப்போதும் தாமதம் ஒன்று இல்லை. இதற்காக என்னால் ஆன முயற்சியை செய்கிறேன். ஆனால் அதற்குரிய பலனை அனுபவிக்க நான் இருப்பேனா என்பது தெரியாது. 

ஆனால் நீங்கள் தான் இருப்பீர்கள். அந்த வேலையை இன்றே தொடங்குகள். மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள்  மய்யம் விசில் என்ற ஆப்பை டவுன் லோடு செய்யுங்கள். கட்சி கார்டு போன்றது இது. இதில் தனி உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் யாரையும் கேள்வி கேட்க முடியும். இந்த ஆப்பில் முழு விபரங்கள் இருக்கிறது. இது உங்கள் கையில் இருக்கும் அஹிம்சை வழியிலான ஆயுதம் இது. எந்த பயம் இல்லாமல் செய்ய முடியும்.  
மக்கள் நீதி மய்யம் படிப்படியாக ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கிறது. ஒவ்வொரு நாளும் நகர்வு அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் மய்யத்தில் இணைந்து வருகிறார்கள். அடுத்த மாதம் மாணவர்கள் எழுச்சி எப்படி இருக்கிறது என்பது தெரியும். கல்லூரி மாணவர்களை சந்திக்க அரசாணை மூலம் தடை செய்து இருக்கிறார்கள். ஆனாலும் மாணவர்கள் பெருந்தன்மையோடு நம்மை அழைக்கிறார்கள். எனவே அந்த தடையை  எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சரித்திரம் படைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் அகில இந்திய பொப்பாளர் பொறுப்பாளர் தங்கவேலு, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட இணை செயலாளர் அலெக்ஸ், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், ஒன்றிய பொறுப்பாளர் சத்யா சங்கர், நகர பொறுப்பாளர் நாராயண மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ரவி ஆனந்த், ஒன்றிய சட்ட ஆலோசகர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.       


மக்கள் கருத்து

ஒருவன்மே 18, 2018 - 09:17:34 PM | Posted IP 162.1*****

ஆமா .. அந்த கட்டுமரம் மாதிரி இன்னொரு 3 பொண்டாட்டிக்காரன்... நம்பவா போறோம் ??

geethaமே 18, 2018 - 03:53:27 PM | Posted IP 162.1*****

எல்லாம் சரி அன்னே நீங்க முழுசா தமிழ் ல பேசுங்க

சாமிமே 18, 2018 - 03:15:57 PM | Posted IP 162.1*****

மாணவர்களை படிக்க விடுங்கள் - அவர்களை நடிக்க விடாதீர்கள்

தமிழன்மே 18, 2018 - 01:41:32 PM | Posted IP 162.1*****

தமிழர்களின் பண்பாடு என்றால் என்ன திரு கமால்ஹசன் அவர்களே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory