» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் : துாத்துக்குடியில் கமல்ஹாசன் உறுதி

வியாழன் 17, மே 2018 8:40:08 PM (IST)மக்கள்நீதி மய்யம் அரசியல்வாதிகளுக்கு  புதியபாடம் கற்பிக்கும் என துாத்துக்குடியில் கமல்ஹாசன் பேசினார்.

மக்கள்நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் துாத்துக்குடி விவிடி சிக்னலில் நடைபெற்றது.இதில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது,நாடு வளமாக இருப்பது தான் எனது ஆசை.பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் இருக்க வேண்டும்.ஆனால் லாபம் சம்பாதிக்க வேண்டும் .மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற தொழிற்சாலைகள் வேண்டாம்.

இதை தெரிவிக்க தான் துாத்துக்குடி வந்தேன். இந்த சந்திப்பு உங்களையும் என்னையும் பிணைத்தது.எல்லாரும் மக்கள்நீதி மய்யத்தில் உறுப்பினராக வேண்டும்.அதற்கான செயலி திறக்கப்பட்டுள்ளது.செயலி இயக்குவதில் திறமையானவர்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுங்கள்.செயலியை உறுப்பினர் அட்டை போல் பயன்படுத்தலாம்.

அது உங்கள் குறைகளை சொல்லும் சாளரமாகும்.அது வன்முறையற்ற ஆயுதம்.கிராமசபை கூட்டம் மக்களின் ஆயுதம் என ஏற்கனவே கூறியதை நினைவுபடுத்துகிறேன்.ஆலைக்கு எதிராக உங்களுக்கு வந்த கோபம் போல் எனக்கும் இந்த அரசு மீது கோபம் வந்தது.அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டது.முற்றிலும் மாறானது இந்த இயக்கம்.இது புதிய பாதையை அரசியலில் அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

geethaமே 18, 2018 - 04:00:19 PM | Posted IP 162.1*****

முதலில் அவர் தன்னை திருத்திக்கொண்டு அப்புறம் நாட்டை திருத்தலாம்

சாமிமே 18, 2018 - 03:14:24 PM | Posted IP 162.1*****

சம்பந்தம் இல்லாத உளறல் - நாகரீக கோமாளி

தமிழன்மே 18, 2018 - 01:37:05 PM | Posted IP 162.1*****

நேற்று கூட்டம் கூட்டுவதற்கு திராவிடக்கட்சிகளை போல பாட்டு கச்சேரி நடத்தினர்? மக்கள் நிதி மையத்தினர்?... என்ன வித்தியாசம் மற்றக்கட்சிக்கும் உங்களுக்கும்?

ஆப்மே 18, 2018 - 01:27:35 PM | Posted IP 162.1*****

இது அரசியல் களம் அல்ல .மக்கள் களம் .அவரு வரவேண்டிய அவசியம் இல்ல.அவருடைய தொண்டர்கள் பல பேர் இங்கு உள்ளனர்.

உண்மை சொல்பவன்மே 18, 2018 - 10:53:02 AM | Posted IP 162.1*****

அவரு போராடுபவர்களுக்கு ஆதரவு என்று சொன்னாரே , ஆனால் தூத்துக்குடியில் 22 தேதி கடை அடைப்பு , போராட்டம் நடை பெறும்போது கொமல் வருவாரா ?? வரச்சொல்லுங்க பார்க்கலாம் , மக்களை மாட்டி விட்டுட்டு ஏமாற்ற வேண்டாம் ... நடிகர்களை தவிர்த்து விடுங்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory