» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேட்டூர் அணையில் சிறப்பு பூஜை : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் நடந்தது

வெள்ளி 1, ஜூன் 2018 12:59:40 PM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வளம் வேண்டி மேட்டூர் அணையில் சிறப்பு கலச, விளக்கு, யாக பூசை நடைபெற்றது.

இவ்வருடம் பருவ மழை காலத்தோடு பெய்யவும், மேட்டூர் அணை விரைவில் நிரம்பி காவிரி நீர் பாசனம் செழிக்கவும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தஞ்சை மற்றும் சேலம் மாவட்டங்கள் இணைந்து, ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் அருளாசியுடன் சிறப்பு கலச, விளக்கு, யாக பூசையை மேட்டூர் பதினாறு கண் பாலம் அருகில் இன்று (ஜூன் 1 ம் தேதி) காலை 8.30 மணிக்கு நடத்தியது.

இவ்வேள்வியில் பஞ்சபூத சக்கரம் அமைத்து குரு கலசம், குரு யாக குண்டம் மற்றும் சதுர யாக குண்டம் ஆகிய அமைப்புகளுடன் பஞ்சபூத வழிபாடு செய்து 108, 1008 போற்றி மந்திரங்கள் மற்றும் மழை வேண்டுதலுக்கான மந்திரங்களுடன் வேள்வி நடத்தப்பட்டது. இச்சிறப்பு வேள்வியை சேலம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில், தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் வாசன் தலைமையில் ஆதிபராசக்தி சக்திபீடங்களின் இணைச் செயலாளர் இராசேந்திரன் துவக்கி வைத்தார். 

வேள்விச்சாலைக்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட வேள்விக்குழு இணைச்செயலாளர் இராசேந்திரன் மற்றும் தஞ்சை, சேலம் மாவட்ட வேள்விக் குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துர்தர்ஷனிலிருந்து ஒய்வு பெற்ற துணை தலைமை இயக்குனர் மோகன் வேள்வியில் கலந்து கொண்டார். விழாவில் சேலம், ஈரோடு, தஞ்சை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்களும் மற்றும் செவ்வாடை பக்தர்களும் கலந்து கொண்டனர்.வேள்வியின் முடிவில் வேள்வித் தீர்த்தமும், யாக சாம்பலும் மேட்டூர் அணை பகுதியில் கரைக்கப்பட்டது. விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

கல்யாணகிருஷ்ணன்Jun 2, 2018 - 06:55:20 PM | Posted IP 162.1*****

மழை கண்டிப்பாக வரும்

சிவா, TUTICORINJun 2, 2018 - 10:19:22 AM | Posted IP 162.1*****

மகிழ்ச்சி , ஓம் சக்தி , அவர்கள் பணி சிறக்கட்டும்

S.R.BALAJI COIMBATOREJun 1, 2018 - 04:27:52 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

S.R.BALAJI COIMBATOREJun 1, 2018 - 04:26:58 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் ஒம்சக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory