» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிடிவி தினகரன் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை: மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்!!

செவ்வாய் 12, ஜூன் 2018 5:52:46 PM (IST)

மதுரையில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை காமராசர்புரம் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (40). அமமுகவின் வட்டச் செயலராக இருந்த இவர் மதுரை கீழ்மதுரை ரயில் நிலைய ரோட்டிலுள்ள நியாய விலைக்கடையில் தற்காலிக ஊழியராகப் புணிபுரிந்தார். இவர் இன்று காலை வழக்கம்போல், 10 மணிக்கு நியாய விலைக் கடையைத் திறந்து பணியைத் தொடங்கினார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், கடைக்குள் புகுந்து முனியசாமியிடம் தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் அவரை கடைக்கு வெளியில் இழுத்து வந்து வாசலில் போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

கடைக்கு முன்பு ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியசாமியின் உடலை மீட்டு விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory