» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமான நிலைய மோதல் வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் சீமான் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்!!

வியாழன் 14, ஜூன் 2018 11:20:00 AM (IST)

விமான நிலைய மோதல் தாெடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். 

திருச்சி விமான நிலையத்தில் கடந்த மே 19-ம் தேதி மதிமுக, நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 7 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சீமான் உள்ளிட்ட 7 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் முன் ஜாமீன் பெற்றனர். 

இந்நிலையில் நாம் தமிழர் - மதிமுகவினர் மோதல் வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7 பேர் இன்று ஆஜராகினர். ஏற்கெனவே இவ்வழக்கில் சீமான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் பிணைத் தொகையை செலுத்த இன்று ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory