» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்!!

வியாழன் 14, ஜூன் 2018 12:20:10 PM (IST)

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, ஜெயலலிதாவை பார்க்கவில்லை என, மாஜி போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையில், மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆஜரானர். அவரிடம், ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர், ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜார்ஜ் அளித்துள்ள வாக்குமூலம்: ஜெயலலிதா வீட்டில் இருந்து, சசிகலா, 2011ல் வெளியேற்றப்பட்டார். அப்போது, நான், சட்டம் - ஒழுங்கு, ஏ.டி.ஜி.,யாக இருந்தேன். ஜெயலலிதா - சசி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வெளியேற்றப்பட்டார் என, தெரிந்து கொண்டேன். சென்னையில், 2015ல் கால்பந்தட்ட போட்டி நடந்தது. அதில், அம்பானி குடும்பத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தகவலை முன்கூட்டியே, ஜெயலலிதா விடம் தெரிவிக்காததால், நான் கமிஷனராக நியமிக்கப்பட்டதாக தெரிந்து கொண்டேன்.

அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், தினமும் மருத்துவமனை சென்று வருவேன். ஆனால், ஒரு நாளும், ஜெயலலிதாவை பார்த்ததில்லை. கண்ணாடி வழியே சில, வி.ஐ.பி.,கள் ஜெயலலிதாவை பார்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா உடல்நிலை குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். கடந்த, 2016 டிச., 4ல், ஜெயலலிதாக்கு உடல்நிலை மோசமானதை, போலீஸ் வட்டாரங்கள் வழியே தெரிந்து கொண்டேன். உடனடியாக மருத்துவமனை சென்றேன். ஆனால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து, டாக்டர்களிடம் கேட்கவில்லை.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், அவரது உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, விசாரணை நடத்தவில்லை. மேலும், ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா என, அப்போது எனக்கு தெரியாது. தமிழக கவர்னராக இருந்த வித்யசாகர் ராவ், மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை அழைத்து சென்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது; ஞாபகமில்லை; இருக்கலாம்... என, மாஜி கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால், இன்று மீண்டும், பிற்பகல், 2:30 மணிக்கு ஆஜராக, அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் பொது நல மருத்துவரான, திவாகரனின் மகள், ராஜ் மாதங்கி, காது - மூக்கு - தொண்டை மருத்துவர் விக்ரம் ஆகியோர் இன்று ஆஜராகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory