» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது அமர்வுக்கு மாற்றும்!!

வியாழன் 14, ஜூன் 2018 1:51:56 PM (IST)

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இவ்வழக்கு 3வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.  இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என ஒரு நீதிபதியும், செல்லாது என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். 

முதலில் இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது, சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பை வாசித்தார். அவர், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிவிட்டனர். இதுபோல இதற்கு முன்பு நாட்டின் பல வழக்குகளில் நடந்துள்ளது. அப்போது 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணை அனுப்பப்படும். இந்த வழக்கிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று, ஹைகோர்ட் அறிவித்துள்ளது. 3வது நீதிபதி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளாது என தெரிகிறது. இன்றைய தீர்ப்பை 3வது நீதிபதி ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவதுதான் மரபு. எனவே 3வது நீதிபதி நியமனம் செய்த பிறகு, அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அதுவரை 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடரும். அதே நேரம் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாது. 3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்வரை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 14, 2018 - 02:38:32 PM | Posted IP 162.1*****

இதை தான் அஞ்சு மாசமா ஒளிச்சி வைச்சிகளாக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory