» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எலஏக்கள் தகுதிநீக்க தீர்ப்பில் நீதிபதிகள் குழப்பம்...தினகரன் குற்றச்சாட்டு!!

வியாழன் 14, ஜூன் 2018 3:30:57 PM (IST)

பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதுகுறித்து ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் பேசுகையில், 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம்.

இதை எதிர்த்துப் போராடுவோம். காரணம் நாங்கள் அனைவரும் போராளிகள். 18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் எனக்கு இரு கண்கள். கென்னடி என் சகோதரர். டாக்டர் முத்தையா எனது அண்ணன். எனவே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். நானே போக சொன்னாலும் யாரும் என்னை விட்டு போகமாட்டார்கள். 

நாங்கள் எந்த சோதனை வந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். கட்சியை மீட்பதற்காக 18 எம்எல்ஏ.,க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி அரசுக்கான ஆயுள் 3 அல்லது 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அதுகுறித்து தீர்ப்பையும், சட்டத்தையும் படித்துவிட்டுதான் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory