» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பில் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை: தமிழிசை கருத்து

வியாழன் 14, ஜூன் 2018 4:20:25 PM (IST)

"எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை" என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்கிறார். மற்றொரு நீதிபதி செல்லாது என்கிறார். இந்த தீர்ப்பு தீர்வில்லாமல் வந்திருக்கிறது. 

தீர்வை தரும் தீர்ப்பை தான் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஷ்வாணமாக ஆகிவிடுமா என எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது. மூன்றாவது நீதிபதி என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என நீதித்துறை சொல்லியிருக்கிறது. இந்த மாறுபட்ட உத்தரவு வழங்குவதற்கு இரு நீதிபதிகளுக்கும் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இந்த தீர்ப்பில் யாருக்கும் பின்னடைவு கிடையாது. நிச்சயமற்ற தன்மையை தமிழக அரசியல் சூழலில் இந்த தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது” என தமிழிசை தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 15, 2018 - 05:14:46 PM | Posted IP 162.1*****

மொத்தத்தில் உங்க பொழப்பு நல்லா ஓடுது அப்படித்தானே

மக்கள்Jun 15, 2018 - 01:43:19 PM | Posted IP 162.1*****

"இந்த மாறுபட்ட உத்தரவு வழங்குவதற்கு இரு நீதிபதிகளுக்கும் காரணங்கள் இருக்கலாம்" - தமிழிசை, அப்போ காரணம் இருக்குன்னு உண்மையை ஒத்துக்கிறீங்க

ஆப்Jun 14, 2018 - 06:34:05 PM | Posted IP 162.1*****

ஐயோ என் மண்ணாங்கட்டி சாதகமும் இருக்கு badhagamum இருக்கு னு சொல்ல தெரியலியே .மக்களுக்கு பாதகமா இருக்கு ,உங்களுக்கு சாதகமா இருக்கு.எப்படியும் தமிழ்நாட்டை நாசம் ஆக்கிவிட வேண்டும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கீங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory