» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு தடை : உயர்நீதிமன்ற மதுரை மதுரை கிளை உத்தரவு!!

வியாழன் 14, ஜூன் 2018 5:29:04 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

தென்னிந்திய திருச்சபையில் மொத்தம் 24 திருமண்டலங்கள் (டயோசீசன்) உள்ளன. அதில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் 6 சபைமன்றங்கள், 106 சேகர மன்றங்கள் உள்ளன. திருமண்டலத்திற்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. 

அதன்படி வரும் 17ம் தேதி திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள், சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர் பட்டியல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அனைத்து சேகரங்களிலும் வெளியிடப்பட்டது. இதில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தேர்தலில் போட்டியிடக்கூடிய பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிலர் தேர்தல் விசாரணைக்குழுவிடம் முறையீடு செய்தனர். அதிலும் பலருக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த திருமண்டல தேர்தலில் தற்போதைய லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜன் அணியில் எஸ்.டி.ஆர்.தர்மராஜ் மற்றும் மோகன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். அந்த அணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணி சார்பில் டி.பால்பாண்டி போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த அணியிலிருந்த எஸ்.டி.ஆர்.தர்மராஜ் மற்றும் மோகன் ஆகியோர் இந்தமுறை டி.எஸ்.எப். அணிக்கு ஆதரவாக செயல்பட்டனர். டி.எஸ்.எப். அணி சார்பில் இந்த முறை டி.துரைராஜ் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.  ஆனால், போட்டியிட கால அவகாசம் கோரி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முரளிதரன், வருகிற 17ம் தேதி நடைபெற இருந்த திருமண்டல தேர்தலுக்கு தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து

AbelJun 25, 2018 - 05:53:31 PM | Posted IP 162.1*****

Sssssspa

யோசேப்பு AJun 28, 1529 - 06:30:00 AM | Posted IP 162.1*****

ஆம் தடை என்றால் மறுவிசாரனை தேதி எங்கே எது வரை தடை எதுவும் இல்லாதது யாரையோ குழப்பம் அடைய வைத்த பிளான்

RatnasinghJun 15, 2018 - 12:01:49 AM | Posted IP 106.1*****

Update court order copy

GlastonJun 14, 2018 - 10:03:59 PM | Posted IP 172.6*****

Wait 1 hour la court order copy update panran

ArmsJun 14, 2018 - 09:32:28 PM | Posted IP 172.6*****

இது தவறான தகவல் என்று தகவல் வருகிறது.tuty online யிடம் கோர்ட் ஆர்டர் இருக்கிறதா

தா.ஆரோக்கியமதன் அப்சலோம்ஃ கருங்கடல்Jun 14, 2018 - 07:09:44 PM | Posted IP 172.6*****

முடியல..........

SasiJun 14, 2018 - 06:55:59 PM | Posted IP 162.1*****

தவறான தகவல்

SasiJun 14, 2018 - 06:55:24 PM | Posted IP 162.1*****

வ்ரோங் information

kirsthavalJun 14, 2018 - 05:57:01 PM | Posted IP 162.1*****

ஐயோ !!!! ஆண்டவருக்கு ஊழியம் செய்வதை விட்டு விட்டு இப்படி தேர்தல் கேஸ் என்று !!!௧ இந்த நேரத்தில் எத்தனையே பேரை ஏசுவுக்கு ஆதாயப்படுத்தலாமே!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory