» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேஸ்புக் நண்பர் தொல்லை: திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாசினி போலீசில் புகார்!!

செவ்வாய் 10, ஜூலை 2018 10:42:56 AM (IST)

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் முன்னாள் ஆண் நண்பர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டவர் பிரித்திகா யாசினி. இவர் தற்போது சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது முன்னாள் ஆண் நண்பர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் கூறியதாவது: பிரித்திகா யாசினி புகாரின் அடிப்படையில் அவரது ஆண் நண்பர் ஜனார்த்தனன் என்பவரை நேரில் அழைத்து விசாரித்தோம். ‘பேஸ்புக்’ மூலம் நட்பு ஏற்பட்டு பிரித்திகா யாசினியுடன், ஜனார்த்தனன் கடந்த சில வருட காலமாக பழகிவந்தார். அதன்பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திகா யாசினி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன், பிரித்திகா யாசினிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இனிமேல் இதுபோன்ற தொல்லைகளை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினிக்கு கொடுக்கமாட்டேன் என்ற உத்தரவாதத்தை அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory