» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமித்ஷா பேச்சை எச்.ராஜா தவறாக மொழி மாற்றம் செய்துவிட்டார் : அமைச்சர் ஜெயக்குமார்

செவ்வாய் 10, ஜூலை 2018 3:29:22 PM (IST)

தமிழக அரசை அமித்ஷா குற்றம்சாட்டவில்லை, எச்.ராஜா தான் தவறாக மொழி மாற்றம் செய்துவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப் படுத்துவது குறித்து  தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்  அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார்

அமித்ஷாவின் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது; தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பா.ஜ.க.வும் நடத்தியுள்ளது.

அந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் (மைக்ரோ இர்ரிகே‌ஷன்) என்று பேசினார். அதனை எச்.ராஜா "சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்துள்ளார். அதுபோல அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து  இருக்கிறார்., தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார் .மீன்களில் ரசாயனம் பூசப்படுவதாக சமூக விரோதிகள் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்  இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory