» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் விரும்பும் அறிவிப்புகளை ரஜினி விரைவில் வெளியிடுவார்: தமிழருவி மணியன்

புதன் 11, ஜூலை 2018 3:23:34 PM (IST)

விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சியின் பெயரை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.  

இந்நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் ரஜினியுடன் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார். ‘ஒரு மாதம் கழித்து ரஜினி சென்னை வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன். விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Jul 11, 2018 - 06:02:16 PM | Posted IP 162.1*****

காசுக்காக சினிமாவுக்கு நடிக்கும் மராட்டிய-கன்னட கூத்தாடி , மக்களுக்காக முழு நேர அரசியல்வாதியாக ஏன் இருக்க முடியவில்லை ??? இந்த கூத்தாடியை முதல்வராக்குவது எல்லாம் முட்டாள் மக்கள் ..

ராமநாதபூபதிJul 11, 2018 - 05:34:17 PM | Posted IP 162.1*****

இப்படி சொல்லி சொல்லியே அவனை காலி பண்ணாம விட மாட்டான் போல தெரியுதே

மக்கள்Jul 11, 2018 - 04:50:43 PM | Posted IP 162.1*****

எந்த படத்தில்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory