» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வ.உ.சி. துறைமுகத்தில் சூறைக்காற்றில் கார் ஷெட் சரிந்து நான்கு கார்கள் சேதம்

செவ்வாய் 17, ஜூலை 2018 1:17:59 PM (IST)தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூறைக்காற்று வீசியதால் கார் பார்க்கிங் மேற்கூரை சரிந்து விழுந்ததில் நான்கு கார்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் பிரதான நிர்வாக அலுவலகத்தின் பின் புறம் கார்களை நிறுத்துவதற்காக கார் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று  சூறைக்காற்று வீசியதால் கார் பார்க்கிங் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் மீது இரும்பு கம்பிகள் விழுந்தன. பலத்த சத்தத்துடம் விழுந்ததால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர், பொக்லைன் மூலம் சரிந்து விழுந்த இரும்பு கம்பிகள் மற்றும் கூரையை அகற்றினர். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory