» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்

செவ்வாய் 17, ஜூலை 2018 1:38:51 PM (IST)ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.10லட்சம்  கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி பாஸ்கரா திருமண மஹாலில் நடந்தது. இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி சிறப்பு அழைப்பாள‌ராக கலந்து கொண்டார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.10லட்சம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் கிரிஜா, தென் மண்டல செயலாளர் செந்தில்குமார் சாமிநாதன், இணைச்செயலாளர் ரவி, பாலசுப்ரமணியன், சீனிவாசன் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாந்கர செயலாளர் ராஜா, துறைமுக ஊழியர் சங்க நிர்வாகி ரசல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jul 17, 2018 - 06:07:14 PM | Posted IP 162.1*****

அரசியலில் கோடி கோடியா பணத்தை சுருட்டுனவங்க எல்லாரும் கண்டுக்கவே இல்ல. உண்டியல் கட்சின்னு நீங்க கிண்டல் பண்ணுனவங்கதான் இந்த உதவிய செஞ்சிருக்காங்க. செம்படை பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory