» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது

செவ்வாய் 17, ஜூலை 2018 2:50:38 PM (IST)

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை காவலாளிகள் உள்பட 18 பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் அயனாவத்தில் 350 வீடுகள் கொண்ட பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவிதிறன் குறைபாடு உள்ள அந்த சிறுமி, தினந்தோறும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்தி வந்துள்ளார். 

அப்போது, லிப்ட்டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை கத்தியை காட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பயத்தில் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காம வெறி கொண்ட மிருகங்கள் சிறுமியை, மொட்டை மாடி, லிப்ட்டுக்குள் வைத்து இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தோடு விடாமல் குடியிருப்புக்கு வேலைகளுக்கு வந்த பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் என 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வெளி மாநிலத்தில் படித்து வரும் சிறுமியின் மூத்த சகோதரி, நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளார். அவரிடம்  தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி சிறுமி அழுதிருக்கிறார். அதன் பிறகு, இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, சிறுமியிடம் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். காவலாளி ஒருவர் பெயரையும், லிப்டை இயக்கும் ஊழியர்கள் இருவர் பெயரையும் மட்டுமே தெரிவித்துள்ளார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து உடனடியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து அயனாவரம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி, 13 பேரையும் அயனாவரம் போலீஸார் அதிரடியாக பிடித்தனர். இதில், பிளம்பர் சுரேஷ் (32), காவலாளிகள் அபிஷேக் (23), இரால் பிரகாஷ்(40), சுகுமாரன்(60), லிப்ட் ஊழியர் ரவிக்குமார்(64), வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் (40) என 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பேரும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு நேற்று மாலை விசாரணை நடத்தி, சிறுமி கூறிய தகவல்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்துள்ளார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைவரும் வேப்பேரி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory