» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் கலவர வழக்கில் வழக்கறிஞர் கோர்ட்டில் சரண் : பாளை சிறையில் அடைப்பு

செவ்வாய் 17, ஜூலை 2018 7:58:06 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவர வழக்கில் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் (37). வழக்கறிஞரான இவர் மீது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவர வழக்கில் சிப்காட் காவல் நிலையத்தில் இவர் மீது 4 வழக்குகள் உள்ளது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி ஜே.எம் 3 நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று சரண் அடைந்தார். வழக்கறிஞர் ராஜேஷ் குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jul 18, 2018 - 12:20:54 AM | Posted IP 162.1*****

நாட்டை கெடுக்கவே இந்த வக்கீல்ஸ் இருக்காங்க பா.👌👌

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory