» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொட்டும் மழையில் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 7:56:27 PM (IST)

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்றிரவு அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலகுறைவால் திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை காலமானார். அவரது உடல் அண்ணா சமாதி அருகே நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை முதலே அவரது உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் உதவி யாளர் சண்முகநாதன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்நிலையில் இன்றிரவு (ஆக 9 ம் தேதி) சுமார் 7.30 மணியளவில் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, தமிழரசு, அமிர்தம், கருணாநிதியின் கொள்ளுப்பேரன்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தும் சமயம் மெரினாவில் மழை பெய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory