» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரளம், கர்நாடகத்தில் கனமழை : தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:31:17 AM (IST)
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்வதால், தமிழகத்தில் காவிரிக் கரையோரத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் செயற் பொறியாளர் ஆர். சரவணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து கூடுதல் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த இரு அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் இன்னும் இரு நாள்களுக்குள் மேட்டூர் அணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக தலைமைச் செயலர், தமிழக அரசின் மீட்பு, மறுவாழ்வுத் துறையின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:17:52 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:48:51 AM (IST)

சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:30:48 AM (IST)

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு
சனி 16, பிப்ரவரி 2019 8:13:07 PM (IST)

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி
சனி 16, பிப்ரவரி 2019 3:59:11 PM (IST)

காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சனி 16, பிப்ரவரி 2019 3:42:30 PM (IST)
