» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமுருகன் காந்தி கைது.. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள்: சீமான் அறிக்கை
வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:44:13 PM (IST)
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சித் தத்துவத்தையே முற்றுமுழுதாகக் குலைக்கிற இதுபோன்ற ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் யாவும் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நாசகாரத் திட்டங்களை மண்ணில் புகுத்துவதும், அதற்கெதிராக கருத்தியல் பரப்புரையையும், களப்பணியும் செய்யும் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோக வழக்கு என அடக்குமுறைகளை ஏவிவிடுவதுமான நடவடிக்கைகள் யாவும் அரசப்பயங்கரவாதத்தின் உச்சகட்டமாகும்.
தம்பி திருமுருகன் காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் தேசத் துரோக வழக்கு என்பது சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். ஆகவே, அவர் மீது பொய்யாக தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கினைத் திரும்பப் பெற்று தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:17:52 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:48:51 AM (IST)

சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:30:48 AM (IST)

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு
சனி 16, பிப்ரவரி 2019 8:13:07 PM (IST)

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி
சனி 16, பிப்ரவரி 2019 3:59:11 PM (IST)

காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சனி 16, பிப்ரவரி 2019 3:42:30 PM (IST)
