» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி : நவ 11 ம் தேதி தேர்வு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 2:19:38 PM (IST)

குரூப் - 2 தேர்வு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதற்காக இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உதவி வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory