» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வ.உ.சி துறைமுகத்தில் ரூ.3,090 கோடியில் திட்டங்கள் : சுதந்திர தின உரையில் துணைத் தலைவர் தகவல்

புதன் 15, ஆகஸ்ட் 2018 12:43:32 PM (IST)தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதிகளில், கப்பல் தளம் ஆழப்படுத்தும் பணிகள் உட்பட ரூ.3,090 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் அதிவிரைவில் செயல்படுத்த உள்ளது என துறைமுக சபை துணைத் தலைவர் வையாபுரி கூறினார். 
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துறைமுக பொறுப்புக் கழகத் துணை தலைவர் நா. வையாபுரி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவியர் படை துறைமுகப் பள்ளி மாணவ, மாணவியர், மற்றும கடற்சார் பயிற்சி மைய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் தனது சுதந்திரதின உரையில், நம்முடைய முன்னோர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்ததை சுட்டிக்காட்டினார். 

மேலும் இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் 14 வரை 12.83 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள், துறைமுக ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார். அவர், மேலும் தனது உரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. பெரியவகை கப்பல்கள் துறைமுகத்திற்கு வரும் நுழைவு வாயிலினை 153 மீட்டர் லிருந்து 230 மீட்டராக விரிவுபடுத்துவதற்கும், கப்பல் வரும் வழித்தடத்தினை 17.20 மீட்டராகவும், துறைமுக பகுதிகளின் ஆழத்தினை 16.50 மீட்டராக ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் வ.உ.சி கப்பல் தளம் 3 மற்றும் 4ஐ நவீனமாக்கும் பணிகள் போன்ற திட்டங்கள் ரூ 3,090 கோடி திட்டமதிப்பீட்டில் அதிவிரைவில் செயல்படுத்த உள்ளது. 

இத்திட்டங்கள் 2020-ம் ஆண்டு நிறைவுறும் தருணத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 14,000 டி.இ.யுக்களை கொண்ட சரக்கு பெட்டக கப்பல்கள் மற்றும் முழு அளவுடன் வரக்கூடிய பனமாக்ஸ் வகை கப்பல்களை கையாளும், இதனால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாகவும் மற்றும் பிரதான கப்பல்களின் நுழைவு வாயிலாகவும் திகழும் என்று கூறினார். துறைமுக துணை தலைவர், கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் மிகச் சிறப்பாக பணிபுரிந்த துறைமுக ஊழியர்களுக்கும், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார். துறைமுக பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory