» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனமழையால் 63 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

சனி 18, ஆகஸ்ட் 2018 1:48:11 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் 63 கிலோ மீட்டர் தூர மாநில அரசு சாலைகள் சேதமடைந்துள்ளது என மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பும் முகாம் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும் பாேது கன்னியாகுமரியில் கனமழையால் இதுவரை 11 வீடுகள் முழுமையாகவும் 56 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளது. 171 மின்கம்பங்கள்  23 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் கூறினார். 

63 கிலோ மீட்டர் தூர மாநில அரசு சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பயிர்கள் சேதமடைந்தது குறித்து முழுமையாக தண்ணீர் வடிந்த பின்னரே கணக்கிடப்படும் என்றார். தேங்காப்பட்டணத்தில் கடலில் மாயமான 2 மீனவர்களில் ஒருவர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை தேடும் பணி  நடந்து  வருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory