» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் : புதிய திருப்பம்

வியாழன் 13, செப்டம்பர் 2018 4:05:30 PM (IST)

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கினார். 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை இருமுறை சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆளுநர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தாரா இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதல்வருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துவிட்டது.

அவர் அன்றைய தினம் இரவு 11.30 மணிக்குத்தான் இறந்தார் என நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்பல்லோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory