» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை-விருதுநகர் இடையே பராமரிப்பு பணிகள்: ரயில்கள் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:27:59 PM (IST)

மதுரை-விருதுநகர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை-விருதுநகர் பிரிவில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ரயில்கள் விவரம்: திருநெல்வேலி-ஈரோடு-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண்.56826) செப்.14 முதல் 30 ஆம் தேதி வரை புதன், சனி தவிர பிற நாள்களில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக காலை 6.20 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள்(எண்.56822/56821) செப்.14 முதல் 30 ஆம் தேதி வரை புதன், சனி தவிர பிற நாள்களில் திண்டுக்கல்-திருச்சி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 

பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள்(எண்.56769/56770) செப்.14 முதல் 29 ஆம் தேதி வரை புதன், சனி தவிர்த்துப் பிற நாள்களில் விருதுநகர்-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில் (எண்.56769) செப்.14 முதல் 29 ஆம் தேதி வரை புதன், சனி தவிர்த்துப் பிற நாள்களில் மதுரை-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் (எண்.56319/56320) செப்.14, 18, 21 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்-விருதுநகர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory