» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை உடனடியாக வழங்க நடவடிக்கை : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:46:51 PM (IST)

தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேணடும்.

உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிலக்கரியை வழங்குமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கும் ரயில்வே துறைக்கும் உத்தரவிடுமாறு முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், காற்றாலை மின் உற்பத்தி செப்டம்பர் மாதத்தோடு முடிவடைவதால், மின் உற்பத்தி பாதிக்கும் என்றும், மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரி  மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி வழங்காவிட்டால் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களை மூடும் நிலை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory