» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்தி வைக்க வேண்டும் : தமிழகஅரசு சார்பில் கோரிக்கை

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 7:11:16 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையில் மாசு குறித்து ஆய்வு செய்ய வருவதை ஒத்திவைக்க வேண்டும் என தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலா குழுவை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வாலா தலைமையிலான குழு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலா குழு ஸ்டெர்லைட் ஆலையில் மாசு குறித்து ஆய்வு செய்ய வருவதை ஒத்திவைக்க வேண்டும் என  தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும்  வேதாந்தா குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மாசு குறித்து ஆய்வு செய்ய வருவதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory