» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி படித்துறைகளை சீரமைக்க என்ன நடவடிக்கை ? : உயர்நீதிமன்ற கிளை கேள்வி

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 8:55:11 PM (IST)

தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறைகளை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. 

புஷ்கர விழா தொடங்குவதற்கு முன்பு தாமிரபரணியில் உள்ள அனைத்து மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் புஷ்கர விழாவை கொண்டாடவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பழமையான மண்டபங்கள், புரதான சின்னங்களை புனரமைப்பது அரசின் கடமை. எனவே, தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறைகளை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory