» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

புதன் 19, செப்டம்பர் 2018 5:39:38 PM (IST)

பாடநூல் நிறுவன மேலாண் இயக்குனர் உட்பட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கும் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. நில மேலாண்மை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் விஜயாராணி வேளாண்துறை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

2. தர்மபுரி மாவட்ட சர்க்கரை கூட்டுறவு ஆலை மேலாண் இயக்குனராகப் பதவி வகிக்கும் கற்பகம் நில மேலாண்மை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை கூடுதல் செயலாளராகப் பதவி வகிக்கும் பிங்கி ஜோவல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. வணிகவரித்துறை கூடுதல் ஆணையராகப் பதவி வகிக்கும் பாலாஜி டெல்டா மாவட்ட பொதுப்பணித்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. நில மேலாண்மை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் மேகநாத ரெட்டி வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு பாடநூல் வாரிய மேலாண் இயக்குனராகப் பதவி வகிக்கும் ஜெகந்நாதன் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராகப் பதவி வகிக்கும் அதுல் ஆனந்த் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. வேளாண் துறை கூடுதல் இயக்குனராகப் பதவி வகிக்கும் குமாரவேல் பாண்டியன் சென்னை மாந்கராட்சியின் கல்வித்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராகப் பதவி வகிக்கும் வெங்கடாச்சலம் பாடநூல் நிறுவன மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

10. சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கும் மதிவாணன் கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை நிர்வகிப்பார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory