» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய சொகுசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

புதன் 10, அக்டோபர் 2018 1:47:02 PM (IST)


சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுமார் 471 சொகுசுப் பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இரண்டாவது கட்டமாக, சுமார் ரூ.126 கோடி மதிப்புள்ள 471 பேருந்துகளை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்துகளில் ஏறி பார்வையிட்டு பிரயாணம் மேற்கொண்டார். இதற்கான விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.இதில், ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், கழிவறை வசதி கொண்ட பேருந்துகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory