» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வியாழன் 11, அக்டோபர் 2018 5:23:47 PM (IST)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாககவும், .  சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர். .  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory