» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சின்மயி பாலியல் புகார் குறித்து சம்பந்தபட்டவரே விளக்கமளிக்க வேண்டும்: கமல்ஹாசன் பேட்டி

வெள்ளி 12, அக்டோபர் 2018 3:55:14 PM (IST)

பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் குறித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மூன்று நாட்கள் பயணமாக இன்று சேலம் புறப்பட்ட கமல், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடகம் போடுபவர்களே மழையை பொருட்படுத்தாமல் போடுவார்கள். அந்த தைரியம் சினிமா, நாடகக்காரர்களுக்கே இருக்கிறது. மழைக்காலத்திற்காக தமிழக இடைத்தேர்தலை தள்ளிப்போடுவதை ஏற்க முடியாது. சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்ற போது வேண்டாம் என்றார்கள் என்று கூறிய கமல், கோயிலில் இருப்பவர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் அவர்கள் துணை இல்லாமல் கோயிலில் உள்ள சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. கோயில் சிலைகளை தங்கள் சொத்தாக நினைத்து அதனை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.

மேலும், ஆளுநர் பற்றி மிகவும் ஜாக்கிரதையாக மரியாதையாக பேசப்பட வேண்டும் அதே நேரம் தம் மீது புகார் வரும்போது தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை அவர் பதவி விலக வேண்டும் என்றும் தைரியமான அரசியல்வாதிக்கு அதுதான் அழகு. பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறு. மீடூ என்ற இயக்கம் மூலம் உண்மைகள் வெளிவந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். கண்ணகி காலத்தில் இருந்தே இந்த பிரச்னை இருக்கிறது என கமல்ஹாசன் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory