» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!!

வெள்ளி 12, அக்டோபர் 2018 5:11:37 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கடந்த ஜூன் 13ம் தேதியே நெடுஞ்சாலைத் துறை ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக புகார் அளித்தது. சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஆளுநர், அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ரூ.3120 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை தனது சம்மந்திக்கு ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், டெண்டர் விட்டதில் ஊழல் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையை அறிக்கைதர வைத்தார். தனக்குத்தானே நீதிபதியாகிக்கொண்ட முதல்வரை பார்த்து நாடே வெட்கப்படுகிறது. இந்திய முதல்வர்களிலேயே தம் சம்மந்திக்கு ஒப்பந்தங்களை கொடுத்தது எடப்பாடி மட்டுமே.திட்டத்திற்கு நிதி உதவி அளித்த உலக வங்கி விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளார் எடப்பாடி. சிபிஐ சுதந்திரமாக விசாரணை நடத்த வழிவிட்டு பதவியில் இருந்து முதல்வர் விலக வேண்டும். டெண்டர் ஊழல் வழக்கு ஆதாரங்களை பெற்று சிபிஐ விசாரணையை உடனே துவங்க வேண்டும்.உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறி சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory