» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சின்மயி புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வெள்ளி 12, அக்டோபர் 2018 6:41:51 PM (IST)

பாடகி சின்மயி புகார் அளிக்கும் பட்சத்தில், காவல்துறை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகள் பற்றி #MeToo என்ற ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்தக் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக பெருகி உள்ளன.பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான வைரமுத்து மீது பாலியல் புகார்களை சுமத்தினார். இது சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சின்மயின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நடிகை சமந்தா, ஸ்ரீ ரெட்டி, நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த தமிழக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், மீ டு தமிழகத்திற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளது. பாடகி சின்மயி புகார் அளித்தால், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும், என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிOct 13, 2018 - 10:13:44 AM | Posted IP 162.1*****

இவரெல்லாம் ஒரு மந்திரி. எந்த இலாகா மந்திரி என்றே தெரியாதவர். இவர் பேச்சு மட்டும் இல்லையென்றால்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory