» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைரமுத்து விஷயத்தில் விரைவில் சட்டரீதியான நடவடிக்கைகள் : பாடகி சின்மயி

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:36:39 PM (IST)

கவிஞர் வைரமுத்து குறித்து அடுத்தக்கட்டமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் மீ டு என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. இதில் பணிபுரியும் இடத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபல பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து கடந்த 2004 ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் விளம்பரத்திற்காக வைரமுத்து மீது புகார் அளிக்கவில்லை என சின்மயி கூறியிருந்தார். இதன் அடுத்த கட்டம் பற்றி பேசிய சின்மயி கவிஞர் வைரமுத்து குறித்து தாம் கூறியது உண்மை. இச்சம்பவத்தில் அடுத்தக்கட்டமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory