» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் ரூ.1000கோடி இழப்பு : சுங்கத்துறை ஆனையர் திவாகர் பேட்டி!

வெள்ளி 12, அக்டோபர் 2018 8:44:41 PM (IST)ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் வ.உ.சி துறைமுகம் வழியாக சுங்கத்துறைக்கு கிடைக்கக்கூடிய ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத்துறை  ஆனையர் திவாகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சுங்கத்துறை மற்றும் சரக்கு கையாளும் நிறுவனங்கள் இணைந்து மின்னனு தரவு பரிமாற்றம் கடந்த 2016ம் ஆண்டு துவக்கப்பட்டது இதன் மூலம் சரக்கு பெட்டகங்களில் இருந்து செல்லும் சரக்குகள் எங்கு செல்கிறது, தற்போது சென்று கொண்டிருக்கும் வழித்தடம், துறைமுகத்தை வந்தடையும் நேரம் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதில், தற்போது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகள் இணைக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவர். இதற்கான சாதனை விழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி துறைமுகசபை துணைத்தலைவர் வையாபுரி, தலைமை சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன் குமார் ரவுத்ரி, சுங்கத்துறை ஆணையர் திவாகர் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்கள், இந்திய தொழில் வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி துறைமுக சபைத்தலைவர் வையாபுரி கூறும்போது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மிதவை ஆழம் தற்போது 16.50 மீட்டர் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இன்னும் ஓரு மாதத்தில் 9600 சரக்கு பெட்டகங்கள் கொண்ட பெரிய பனாமாஸ் வகை கப்பல்கள் கையாளப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியில் 2021 ஆம் ஆண்டு துறைமுகத்தின் மிதவை ஆழம் 18 மீட்டராக அதிகரிக்க திட்டம் உள்ளது. கப்பலின் நுழைவாயில் 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பெரிய சரக்கு பெட்டக கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் கையாள முடியும் என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் திவாகர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் சுங்கத்துறை கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ 4400 கோடி வருவாய் ஈட்டியது. தற்போதைய நிதியாண்டில் இது ரூ 3400 கோடியாக குறைய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  இறக்குமதி மூலம் சுங்கத்துறை கிடைக்கப்பெறும் வருமானத்தின் 27 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக கிடைக்கப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுங்கத்துறைக்கு வருடத்திற்கு ரூ 1400 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக‌ தெரிவித்தார்.


மக்கள் கருத்து

rajaOct 14, 2018 - 10:13:13 PM | Posted IP 162.1*****

please avoid this kind of news.. junk news

கிழவன்Oct 13, 2018 - 05:56:28 PM | Posted IP 141.1*****

வாங்குன காசு பத்தலையாம் .. ஓவரா கூவுறான் ..

ஒருவன்Oct 13, 2018 - 12:40:36 PM | Posted IP 162.1*****

குசராத்துல கொண்டு போய் வைக்கலாமே , ஒப்பந்த தொழிலாளர்களை கூட்டிட்டு போங்க .. கோடி கோடியா புரளும் ...

உண்மைOct 13, 2018 - 12:19:04 PM | Posted IP 162.1*****

சுங்க இலாக்காவுக்கு வருமானம் இழப்பு எனில் ஸ்டெர்லைட் ஆலையை உங்கள் சொந்த ஊரில் வைத்து கொள்ளவும். திரு. பழனி அவர்களே உங்களுக்கு ஸ்டெர்லைட் இல் வேலை வேண்டும் எனில் ராஜஸ்தான் பாலை வனத்தில் போய் இந்த ஆலையை வைத்து வேலை பார்க்கவும் எங்களுக்கு தேவை இல்லை. அவன் செய்யும் சமூக சேவை தேவை இல்லை.

ராமநாதபூபதிOct 13, 2018 - 11:16:43 AM | Posted IP 141.1*****

இழப்பு உங்களுக்கா இல்ல அரசுக்கா?????

MULLAIOct 13, 2018 - 09:43:56 AM | Posted IP 162.1*****

STERLITAI MUDIYATHAL PHALA UOIR KAL KAKA PATTULLATHU. PARUVA MALAI PEITHULLATHU, ATTHI ATHIN KALATHIL ELAM SARIYAI NADAKIRATHU.

ArunOct 13, 2018 - 08:32:08 AM | Posted IP 162.1*****

Neenga lanjam vangama velai paunga da 1000 cr gov natama illa ungaluku natama

PalanikumarOct 13, 2018 - 01:47:47 AM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் அலையை உடனே திறக்க வேண்டும் தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏர் படுத்தி தரவும் தமிழ் நாடு மக்களுக்கு அதிகமாக வேலை வழங்க வேண்டும் ஸ்டெர்லைட் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சமூகசேவை செய்ததை ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் செய்யவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory