» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல் கட்சி கருவில் கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

செவ்வாய் 16, அக்டோபர் 2018 2:25:43 PM (IST)

நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் கூறினார். 

மிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அந்த கட்சி வளர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் ஆபத்து. கமல் வெளிநாட்டு தீய சக்திகளுடன் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர்.

கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வுதான் நிற்கும். மற்ற கட்சிகள் இல்லாமல் போய் விடும். அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க. தான். தனக்கு வந்த சிறிய பிரச்சனையை கூட தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கமலால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது.

பால்வளத்தில் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி நடந்துள்ளது. கொள்முதல் விற்பனையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி, பால்வளத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளார்.  அவர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். காலையில் 3 இட்லி, இரவில் கஞ்சி குடித்து எளிமையாக வாழ்ந்து வருகிறார்.மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வராக அவர் உள்ளார். சபரிமலை விவகாரத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் யாரும் தலையிடக்கூடாது. காலம், காலமாக உள்ள நடைமுறையை மாற்றுவதால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

அருண்Oct 17, 2018 - 07:51:58 AM | Posted IP 157.5*****

நாகரிகமாக சொல்லி இருக்கலாம்... கமல் கட்சி தேவையற்ற ஒன்றே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory