» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 16, அக்டோபர் 2018 5:05:11 PM (IST)

ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்யக் கோரி என்னை ஐகோர்ட்டில்  ஷேக் தாவூத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில்  ஆன்லைன் விற்பனையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.  ஆன்லையில் அதிக அளவு சீனப் பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்தது. ஆன்லைனில் அனுமதித்தால் பாதுகாப்பற்ற சீன பட்டாசுகள் விற்பனையை ஊக்குவித்தது போலாகிவிடும் என கூறி உள்ளது. இதுதொடர்பாக வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் ஆன்லைனில் பட்டாசு விற்பது தொடர்பான வழக்கை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory