» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமானநிலையம் அமைப்பதற்கு இடங்கள் ஆய்வு : அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வை

செவ்வாய் 16, அக்டோபர் 2018 7:18:34 PM (IST)

சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக இருக்கன்துறை,காவல்கிணறு, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் இந்திய அளவில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம், பகவதியம்மன் கோவில்,மாத்துார் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, புதிதாக அமையும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் என எராளமான முக்கிய இடங்களையும் பசுமையான மலைகளையும் தோட்டங்களையும் உடையது. இதை கண்டு ரசிக்க இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர்.

ஆனால் அவர்கள் விரைவாக வருவதற்கு கன்னியாகுமரி பகுதியில் விமான நிலையம் இல்லை. எனவே சுற்றுலா பயணிகள்,பக்தர்கள் வசதிகாக  சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை ,டெல்லி விமான நிலைய அதிகாரிகளுடன் நெல்லை-  கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை,காவல்கிணறு, வள்ளியூர் ,பழவூர் ,பணகுடி பகுதிகளில் ஆய்வு செய்தார். விமான நிலையத்திற்கு தேவையான அடிப்படை அம்சங்களை கருத்தில் கொண்டு இடங்கள் பரிசிலிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory