» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீ டூ இயக்கத்தில் அப்பாவி ஆண்கள் நியாயத்திற்கு போராடவேண்டியுள்ளது : இயக்குனர் சுசி கணேசன்

செவ்வாய் 16, அக்டோபர் 2018 7:56:15 PM (IST)

மீ டூ இயக்கத்தில், அப்பாவி ஆண்கள் தன் பக்க நியாயத்திற்கு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்தார்.

மீ டூ வந்த பிறகு பல துறைகளிலும் பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர். இதில் திரைத்துறையில் நடிகர் நானா படேகர், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் லீனா மணிமேகலை தனக்கு திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு கூறினார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் சுசி கணேசன் கூறும் போது, லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார் . லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. லீனா மணிமேகலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். மீ டூ இயக்கத்தில் அப்பாவி ஆண்கள் தன் பக்க நியாயத்திற்கு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory