» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லது: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சனி 20, அக்டோபர் 2018 12:49:30 PM (IST)

மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லதுது என சபரிமலை விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டு இன்று காலை வாரணாசியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பெண்களுக்குகு சம உரிமை வேண்டும் என்பதில் வேறு கருத்து இல்லை.  ஆனால், காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதிகம் பாதுகாக்கப்பட வேண்டும். சடங்குகளில் நீதிமன்றம் தலையிடாமல் இருப்பது நல்லது. டிச.12ம் தேதி அரசியல் கட்சி பற்றி அறிவிக்கப்போவதில்லை. 

ஆனால், கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்தார். மீ டூ இயக்கம் பெண்களுக்கு தேவையானதுதான். ஆனால், அதை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

வடிவேல்Oct 22, 2018 - 06:13:06 PM | Posted IP 162.1*****

அப்படியே மற்ற எல்லாத்துலயும் தலை இடாமல் இருப்பது நல்லது என்று சொல்லுடா.

நேர்மைMar 26, 1540 - 11:30:00 AM | Posted IP 141.1*****

பிஜேபி போராட்டம் பற்றி ஒண்ணும் சொல்லலியா..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory