» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதசடங்குகள் குறித்து நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

சனி 20, அக்டோபர் 2018 1:07:47 PM (IST)

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என  வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 11வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ம் தேதி மரணமடைந்தார். பின்னர், 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது ஸ்வீகரம் மற்றும் பட்டாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை ஆசிரம சீடர் வெங்கட வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர முடியாது எனவும் சிவில் வழக்கு மட்டுமே தொடர முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், மத சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory