» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழும்பூருக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் சோதனை

சனி 20, அக்டோபர் 2018 1:33:54 PM (IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கடிதம் ஒன்று வந்தது. அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார், ஜோத்பூர் விரைவு ரயிலை எண்ணூரில் நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை வேறொரு ரயிலுக்கு மாற்றி சென்ட்ரல் அழைத்து வந்தனர். 

பின்னர் அந்த ரயில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முழு ஆய்வுக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory