» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் பட்டியல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

சனி 20, அக்டோபர் 2018 4:05:37 PM (IST)

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் இப்போது தோண்டத் தோண்ட கிடைக்கின்றன என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை வெளியட்டு பேட்டியளித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது, சிபிஐ விசாரணை நடத்தப்படும் ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசியதாவது: "தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஸ்டாலின் பொய்யாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியைக் கலைக்கலாம் என முயற்சி எடுத்தார். 

கட்சியை உடைக்கலாம் என பிரிவினையைத் தூண்டினார். எதுவும் நடக்கவில்லை. இப்போது இதனைக் கையில் எடுத்துள்ளார். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசி சாலை ஒப்பந்தத்தை உறவினருக்கு கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு. இவர்கள் சொல்வது நெருங்கிய உறவோ, ரத்த உறவின் கீழோ வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியில்லாமல் ஸ்டாலின் இருக்கிறார். தவறான செய்தியை மக்களுக்குச் சொல்கிறார். ஆன்லைன் டெண்டரில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. இதே ராமலிங்கம் அண்ட் கோவுக்கு 2010 இல் திமுகவின் ஆட்சிக்காலத்தில் ரூ.74 கோடிக்கு டெண்டர் வழங்கியுள்ளனர். 

மொத்தம் 10 டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், அந்நிறுவனத்திற்கு தகுதியில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. இரட்டை வழிச்சாலையில் ஒரு கி.மீ. சாலை அமைக்க 2 கோடியே 20 லட்சம் ரூபாயாகும் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சொல்கிறார். ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் மத்தியில் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது 8 கோடியே 78 லட்சம் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கியுள்ளனர். 2006-ல் ஒரு கி.மீ. சாலைக்கு 7 கோடியே 83 லட்சத்திற்கு கொடுத்திருக்கின்றனர்.

சென்னை பைபாஸ் 2-ஆம் கட்ட சாலைப் பணிகளுக்கு 2006-ல் 12.42 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். 2006-ல் பாடலூர் - திருச்சி என்.ஹெச் 45 சாலைக்கு ஒரு கிலோமீட்டருக்கு 8.33 கோடி ரூபாயும், 2008-ல் பாண்டிச்சேரி - திண்டிவனம் என்.ஹெச் 46 சாலைக்கு 7.52 கோடி ரூபாய்க்கும் டெண்டர் கொடுத்துள்ளனர். இப்போது கட்டுமானப் பொருள்களின் விலை 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தற்போது ஆயிரத்து 515 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சாலையை அமைத்த நிறுவனமே அதனைப் பராமரிக்க வேண்டும் என்பது தற்போதுள்ள டெண்டர் விதிமுறை. அப்படி 16 மாதம் கொடுத்த தொகைதான் இது.

வண்டலூர்-நெமிலிச்சேரி சாலைக்கு திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு 36.45 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டனர். அப்போது 35 தவணையாக அரசு அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்போது அரசு அந்நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை 2 ஆயிரத்து 474.55 கோடி. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.

மடத்தகுளம்-பொள்ளாச்சி சாலைக்கு 11.22 கோடி ரூபாய், ஒட்டன்சத்திரம் - மடத்தகுளம் சாலைக்கு 13.85 கோடி ரூபாய், கல்லகம் - திருப்பூர் சாலைக்கு 14.4 கோடி ரூபாய், திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலைக்கு 14.74 கோடி ரூபாய், திருச்சி - கல்லகம் சாலைக்கு 25.62 கோடி ரூபாய், சோழவரம் - தஞ்சை சாலைக்கு 26.78 கோடி ரூபாய், சேத்தியார்தோப்பு-சோழவரம் சாலைக்கு 27.4 கோடி ரூபாய் என திமுக ஆட்சிக் காலத்தில் டெண்டர் விடப்பட்டது.

இப்போது ஒரு கிலோமீட்டருக்கு 10.16 கோடி ரூபாய்தான். டெண்டர் விட்டு இன்னும் வேலை ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஊழல் என்கிறார்கள். ஆரம்பகட்ட விசாரணைக்குதான் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆற்காடு, உளுந்தூர்பேட்டை, போளூர், செங்கம், விருதாச்சலம், திருவாரூர், ஜெயங்கொண்டம், அரியலூர் உள்ளிட்ட பல சாலைகளுக்கு ஒப்பந்தம் மதிப்பு 611.70 கோடி ரூபாய். இதற்கு வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் 161.67 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளனர்.

2006-ல் நாகப்பட்டினம்-கட்டுமாவடி சாலை மேம்பாடுக்கு 198.77 கோடி ரூபாய் அசல் மதிப்பு. ஆனால், கூடுதலாக 72 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். 2007-09 மூன்றாண்டு காலத்தில் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையுள்ள சாலை மேம்பாட்டுக்கு 119.26 கோடி ரூபாய் அசல் மதிப்பு. ஆனால், 86.72 கோடி ரூபாய் அதிகமாகக் கொடுத்துள்ளனர். ஸ்டாலின் பள்ளிக்கூட மாணவர்போன்று நாங்கள் வழக்கு தொடுத்தால் அவரும் வழக்கு தொடுப்பதாக தெரிவிக்கிறார். விரக்தியின் விளிம்புக்கு ஸ்டாலின் சென்றுள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் இப்போது தோண்ட தோண்ட கிடைக்கின்றன”. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

மனிதன்Oct 21, 2018 - 09:36:45 AM | Posted IP 141.1*****

கூமுட்டை அமைச்சர்

தமிழன்Oct 20, 2018 - 07:51:28 PM | Posted IP 141.1*****

எங்க போ ரஸா நீங்க தோண்டுநிங்க ... சிறுதாவூர் பங்களவா இல்ல கோடா நாடு எஸ்டேட் ஆ? அப்போ என் நீங்க ஏழு வருஷமா சொல்லல ? உங்க சுரண்டும் தொழிலா காய் வசனலய ? து து து

ராமநாதபூபதிOct 20, 2018 - 05:00:54 PM | Posted IP 141.1*****

அட மங்குனி நீங்க தானே ஏழு வருசமா ஆட்சியில இருக்கேங்க. ஒரே ஒரே வழக்கு தொடர்ந்து திமுகவை குற்றவாளி ஆக்க முடியுமா? அந்த தெம்பு தொப்பிக்காரனுக்கும் இல்லை. உங்க கொம்மாவுக்கும் இல்லை. இப்படியே பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான். ஆனால் திமுக உங்க கொம்மாவையே ஊழல் வழக்கில் உள்ளே தள்ளியது என்பதை மறந்து விடாதே மங்குனி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory