» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்: படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி

புதன் 7, நவம்பர் 2018 11:00:30 AM (IST)

நீதிமன்ற தடையையும் மீறி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது. 

தழிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது, அதன்படி நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.   இதனிடையே இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார்.  

இந்நிலையில், சர்கார் படத்தின் எச்.டி., பிரிண்டை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்நிலையில், சர்கார் படம் தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் வெளியாகும் என்று மீண்டும் மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ் ராக்கர்ஸ், சொன்னபடியே விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது. படம் வெளியான அன்றே சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து

சாமீNov 7, 2018 - 02:51:18 PM | Posted IP 162.1*****

விஞ்ஞான வளர்ச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory