» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்க்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் பெயரா? தினகரன் விளக்கம்

வியாழன் 8, நவம்பர் 2018 11:44:35 AM (IST)

சர்க்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தினகரன் விளக்கம் அளித்துள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப் பாத்திரத்திற்கு கோமள வள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ளார்கள் என்று எனக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், "ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்" என்று கேட்டார்.

"நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள்" என்று என்னிடம் கேட்டார். அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory